ஆஸி. ஓபன் தொடரில் இருந்து வெளியேறிய ரஃபேல் நடால்..!
இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அதற்க்கான அறுவைச் சிகிச்சையை 22 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற ரஃபேல் நடால் செய்து கொண்டார். இதனால் கடந்த ஆண்டு ஜனவரிக்குப் பிறகு அவர் விளையாடவில்லை. இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய ஓபனில் தனது முதல் போட்டியில் 2020 யு.எஸ். ஓபன் சாம்பியனும் முன்னாள் நம்பர். 3-வது இடமான டொமினிக் தீமை தோற்கடித்தார்.
பின்னர், கடந்த வியாழன் அன்று ஆஸ்திரேலியா வீரர் ஜேசன் குப்லரை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரஃபேல் நடால் காலிறுதிக்குள் நுழைந்தார். கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த ஆடவா் ஒற்றையா் பிரிவு காலிறுதியில் ரஃபேல் நடால் 7-5, 6-7 (6/8), 3-6 என்ற செட்களில் உலகின் 48-ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ஜோா்டான் தாம்சனிடம் போராடித் தோற்றாா்.
இந்நிலையில், நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட பதிவில்” நான் ஆண்டு முழுவதும் மிகவும் கடினமாக உழைத்தேன். எனக்கு வருத்தமான செய்தி என்னவென்றால், மெல்போர்னில் உள்ள கூட்டத்திற்கு முன்னால் என்னால் விளையாட முடியாது, இது மிகவும் மோசமான செய்தி அல்ல, ஏனென்றால் நான் ஆஸ்திரேலியாவில் விளையாட விரும்பினேன்.
சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மெல்போர்னில் இருந்து திரும்பிய பிறகு ஸ்கேன் செய்ததில் தசையில் சிறிய காயம் இருந்தது. இதனால் சிகிச்சைக்காக ஸ்பெயினுக்குத் திரும்புவதாக” தெரிவித்தார்.