IndvsAfg: இந்தியாவுக்கு எதிரான வீரர்களை அறிவித்த ஆப்கானிஸ்தான்!

ind vs afg t20

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் தயாராகி வருகிறது. இதற்கிடையில்,இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான 19 பேர் கொண்ட அணியை (ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ) ஏசிபி அறிவித்துள்ளது. அணிக்கு முஜீப் உர் ரஹ்மான் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

அதே சமயம் ஆப்கானிஸ்தானின் வழக்கமான டி20 போட்டிகளின் கேப்டனான ரஷித் கான், அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், ஆனால் அவர் சமீபத்தில் மேற்கொண்ட முதுகு அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருவதால் எந்த ஆட்டத்திலும் இடம்பெறமாட்டார்.

அவருக்கு பதிலாக ஷார்ஜாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தானை 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கொடுத்த இப்ராஹிம் சத்ரான், இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு ஆப்கானிஸ்தானை வழிநடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி 

இப்ராஹிம் சத்ரான் (c), ரஹ்மானுல்லா குர்பாஸ் (WK), இக்ரம் அலிகில் (WK), ஹஸ்ரதுல்லா ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, கரீம் ஜனாத், அஸ்மாயுல்லா, அஸ்மாயுல்லா , முஜீப் உர் ரஹ்மான், ஃபசல் ஹக் ஃபரூக்கி, ஃபரீத் அஹ்மத், நவீன் உல் ஹக், நூர் அஹ்மத், முகமது சலீம், கைஸ் அஹ்மத், குல்பாடின் நைப் மற்றும் ரஷித் கான்.

போட்டிகள் எப்போது எங்கெல்லாம் நடைபெறும்?

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் ஜனவரி 11-ஆம் தேதி பஞ்சாபில் உள்ள மொஹாலி மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி ஜனவரி 14-ஆம் தேதி இந்தூரில் இருக்கும் ஹோல்கர் கிரிக்கெட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மூன்றாவது போட்டி வரும் ஜனவரி 17-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்