மணிப்பூர் டூ மும்பை: மீண்டும் நடைப்பயணத்தை தொடங்கும் ராகுல்… யாத்திரையின் லோகோ வெளியீடு!
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மீண்டும் தொடங்கவுள்ள இந்திய ஒற்றுணை நடைபயணத்தின் லோகோ, அதன் டேக்லைன் மற்றும் குறிக்கோளை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வெளியிட்டார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் அக்கட்சியின் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணம் (பாரத் ஜோடோ யாத்ரா) என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொண்டார்.
ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரை பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், இரண்டாவது கட்ட பாத யாத்திரையை நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி வரையில் நடத்த ராகுல் திட்டமிட்டுள்ளார். அதன்படி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இந்த பாத யாத்திரையை வரும் 14-ம் தேதி ராகுல் காந்தி தொடங்க உள்ளார். இந்த யாத்திரைக்கு ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
மற்றொரு மைல்கல்லை எட்டிய இந்தியா! எல்-1 புள்ளியை அடைந்த ஆதித்யா விண்கலம்!
ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரை மணிப்பூரின் இம்பாலில் தொடங்கி நாட்டின் 15 மாநிலங்கள் வழியாக சென்று மும்பையில் நிறைவடைகிறது. மொத்தம் 6,713 கி.மீ. தூரம் கொண்ட இந்த யாத்திரை பேருந்துகளிலும், நடைபயணத்திலும் மேற்கொள்ளப்படும்.
இந்த சூழலில், ராகுல் மீண்டும் தொடங்கவுள்ள நடைபயணத்தின் (பாரத் ஜோடோ நியாய யாத்ரா) லோகோ மற்றும் “நியாய கா ஹக் மில்னே தக்” என்ற டேக்லைனையும் கார்கே வெளியிட்டார். இதன்பின் கார்கே கூறியதாவது, ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ நாட்டின் அடிப்படை சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளில் கவனம் செலுத்தும். நாடாளுமன்றத்தில் பிரச்சனைகளை எழுப்புவதற்கு அரசு வாய்ப்பளிக்காததால், இந்த யாத்திரையை நடத்துவதாகவும் தெரிவித்தார்.