அடுத்த 2 மணிநேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

tn rain

வழக்கத்துக்கு மாறாக ஜனவரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும், நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்கள் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.  அதன்படி, அடுத்த 2 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொக்கமாக ரூ.6000 வெள்ள நிவாரணம் வழங்கியது ஏன்..? அரசு விளக்கம்..!

இதற்கிடையில், நாளை (ஜனவரி 8) செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை ஏற்கனவே பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
axar patel Ruturaj Gaikwad
myanmar earthquake
rishabh pant sanjiv goenka
mk stalin assembly
rishabh pant lsg
delhi parliament assembly