ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகுவதாக ராயுடு அறிவிப்பு!

Ambati Rayudu

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, கடந்த டிசம்பர் 28ம் தேதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், ஒரே வாரத்தில் அக்கட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான அம்பத்தி ராயுடு, கடந்த 2023 ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்திய அணியில் விளையாட சரிவர வாய்ப்பு கிடைக்காததால், ஐபிஎஸ்லில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அதிலுந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, அம்பத்தி ராயுடு அரசியலில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த அம்பத்தி ராயுடு, அந்த மாநிலத்தின் தற்போதைய ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் கடந்த டிசம்பர் 28ம் தேதி அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் இணைந்து அரசியல்வாதியாக உருவெடுத்தார்.

மைதானத்தின் நடுவில் அழ ஆரம்பித்த டேவிட் வார்னர்?

இதனால் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், ஆந்திராவில் அவரது சொந்த தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், அரசியலில் தீவிரமாக செயல்பட உள்ளார் எனவும் பல்வேறு தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், கட்சியில் இணைந்த ஒரு வாரரத்திலேயே கட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகுவதாக ராயுடு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பதிவில், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்