எனக்கு நாய் வேண்டும் என்று அரிவாளால் வெட்டிய நபர்..!!
மார்த்தாண்டம் அருகே வளர்ப்பு நாயை கொடுக்காத ஓனருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதியை சேர்ந்த ரசல்ராஜ் (38).இவர் தனது வீட்டில் வளர்ப்பு நாய் வளர்த்து வந்துள்ளார். அந்த வளர்ப்பு நாயை தனக்கு தந்துவிடும்படி அவர் பக்கத்து வீட்டில் உள்ள சுனில் என்பவர் கேட்டுள்ளார். அதற்கு ரசல்ராஜ் தர முடியாது என்று மறுக்கவே கோபமடைந்த சுனில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும்,மேலும் ரசல்ராஜை தலையில் வெட்டியதாகவும் ரசல்ராஜ் படுகாயத்துடன் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதையடுத்து சுனில் தலை மறைவாகி விட்டார். காவல்துறை சுனில் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்..
DINASUVADU