மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரானார் தமிமுன் அன்சாரி..!

Thamimun Ansari

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியை மாநில தலைவராக நியமனம் செய்து கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு முடிவுகளை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிமுன் அன்சாரி மாநில தலைவராக தனது பணிகளை தொடருவார் என தலைமை நிர்வாக குழு தெரிவித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டு, அதன் பொதுச் செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டு வந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது ம.ஜ.க. இதில், நாகப்பட்டினம் தொகுதியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நிதியை நிர்மலா சீதாராமன் எப்போது யாரிடம் கொடுத்தார்? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி!

இந்த நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய மாநில தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து  வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு பின்பு, தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைப்பெற்றது. அப்போது, கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.

அதன்படி, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவராக தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர் மெளலா. நாசர், பொருளாளர் ஜெஎஸ். ரிஃபாயீ, துணைத்தலைவர் மன்னை. செல்லச்சாமி, இணைப் பொதுச்செயலாளர் செய்யது அகமது ஃபாரூக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவைத்தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் இனி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்