சென்னையில் அடிடாஸை தொடர்ந்து போயிங் நிறுவன மையம்!

Boeing Company

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 7 மற்றும் 8 ஆகிய 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டையொட்டி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, தைவான் உட்பட உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளது. அதன்படி, இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. அந்தவகையில், உலக தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பின் பிரபல நிறுவனமான “அடிடாஸ்” நிறுவனம், சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் தன்னுடைய நிறுவனத்தை தொடங்க உள்ளதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தது.

தமிழ்நாட்டில் “அடிடாஸ்” நிறுவனம்… இந்தியாவில் இதுவே முதல்முறை!

அதன்படி, சென்னையில் அடிடாஸின் “globlal capacity center” திறன் மேம்பாட்டு மையம் அமையவுள்ளது. போர்ச்சுகல், சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள மையங்களுடன் இணைந்து சென்னையில் அமைய உள்ள மையம் செயல்பட உள்ளது. காலணி மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக (R&D) இந்த மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் அடிடாஸ் நிறுவனத்தை தொடர்ந்து உலகில் முன்னணி நிறுவனமான போயிங் நிறுவனத்தின் மையம் அமையவுள்ளது. அமெரிக்காவின் விமான உதிரி பாகம், ஆராய்ச்சி நிறுவனமான போயிங் மையம் சென்னையில் அமையவுள்ளது. சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்க போயிங் திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை மறுநாள் நாடாகும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாகவுள்ளது என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்