சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு..!

Tamilnadu School Students

கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்க காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புத் துறையினர் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

மழை பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில், மிக்ஜாம் புயல்  காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில், அதனை ஈடுசெய்யும் வகையில் நான்கு சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி மாதம் 6 மற்றும் 20 ஆம் தேதிகளியும், பிப்ரவரி மாதம்  3 மற்றும் 17 தேதிகளில் உள்ள சனிக்கிழமை பள்ளிகள் வழக்கம் போல  செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 20-ம் தேதி செவ்வாய்க்கிழமை அட்டவணையிலும்,  பிப்ரவரி 3-ம் தேதி புதன்கிழமை அட்டவணையிலும், பிப்ரவரி 17-ம் தேதி வியாழக்கிழமை அட்டவணையிலும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்