சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை!
சென்னையில் மழை, வெள்ளம் பாதித்து ஒரு மாதம் நிறைவு பெற்ற நிலையில், சென்னை நகரில் இன்று பல்வேறு இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது,.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏதும் இல்லை என்றாலும், காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பிற்பகலுக்கு மேல், ஆவடி, அம்பத்தூர், பாடி, வில்லிவாக்கம், அயனாவரம், அண்ணாநகர், மயிலாப்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழைகொட்டித்தீர்த்தது.
இதனால், பள்ளி முடித்து வீடு திரும்பும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். ஏற்கனவே, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (ஜனவரி 4 மற்றும் நாளை ஜனவரி 5) ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!
அதன்படி, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும், வரும் ஜனவரி 6-ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.