ஐசிசி விருதுகள் 2023: சிறந்த வீரருக்கான பட்டியலில் 3 இந்தியர்களின் பெயர் பரிந்துரை..!
2023-ம் ஆண்டு ஐசிசி விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்தது வருகிறது. அதன்படி, ஒருநாள் , டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 2023-ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் பெயரை ஐசிசி அறிவித்தது வருகிறது. அதன்படி, 2023-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட 4 பேர் கொண்ட வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது.
இந்தப் பட்டியலில் இந்திய அணி சேர்ந்த மூன்று பேரும், நியூசிலாந்தை சேர்ந்த ஒருவரும் இடம் பெற்றுள்ளனர். அதன்படி இந்திய அணியில் இந்திய அணி தொடக்க வீரர் சுப்மான் கில் , வேகபந்துவீச்சாளர் முகமது ஷமி , இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் நியூசிலாந்தின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
விராட்கோலி :
விராட்கோலி 2023 ஆம் ஆண்டில் 27 ஒருநாள் போட்டிகளில் 1377 ரன்கள் எடுத்தது. 1 விக்கெட்டையும், 12 கேட்சுகளையும் பிடித்துள்ளார். ஒருநாள் உலகக்கோப்பையில் கோலி சிறப்பாக செயல்பட்டார். விராட்கோலி உலகக்கோப்பையில் 11 இன்னிங்ஸ்களில் 9 அரைசதம் அடித்து 765 ரன்களுடன் ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
மேலும், கோலி 50 ஒருநாள் சதங்களை அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் அடித்துள்ளார். இந்த சாதனையை நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் விராட்கோலி சாதித்தார்.
ஐசிசி விருதுகள் 2023: சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால் பெயர் பரிந்துரை..!
டேரில் மிட்செல்:
டேரில் மிட்செல் 2023 ஆம் ஆண்டில் 26 ஒருநாள் போட்டிகளில் 1204 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகளை எடுத்தார். அவர் 100.24 ஸ்ட்ரைக் ரேட்டில் மொத்தம் 5 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களை அடித்தார். 22 கேட்சை பிடித்தார். இதற்கிடையில் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில், மிட்செல் இந்தியாவுக்கு எதிராக இரண்டு சதங்களை அடித்தார். மேலும் உலகக்கோப்பையில் 552 ரன்கள் குவித்தார்.
சுப்மன் கில்:
இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் 2023 ஆம் ஆண்டு 29 ஒருநாள் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 9 அரைசதங்களுடன் 1584 ரன்கள் எடுத்தார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 208 105.45 ஸ்ட்ரைக் ரேட்டுடன் சராசரியாக 63.36 இருந்தது.
2023ஆண்டின் தொடக்கத்தில், ஹைதராபாத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 208 ரன்கள் எடுத்ததன் மூலம் இரட்டை சதம் அடித்த இளம் பேட்ஸ்மேன் ஆனார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை கில் பெற்றார். மேலும், ஒரு வருடத்தில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
சச்சின் டெண்டுல்கர் (1996, 1998) வருடத்திலும், ராகுல் டிராவிட் (1999) வருடத்திலும், சவுரவ் கங்குலி (1999) வருடத்திலும் ஒருநாள் போட்டியில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் எடுத்தனர். சுப்மான் கில் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் இரண்டு போட்டிகளில் டெங்கு காரணமாக விளையாடவில்லை என்றாலும் 44.25 சராசரியில் உலகக்கோப்பையில் 354 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் முதல் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 80* ரன்கள் எடுத்தது உட்பட நான்கு அரைசதங்கள் அடித்தார்.
முகமது ஷமி :
2023 ஆம் ஆண்டில் முகமது ஷமி 19 போட்டிகளில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தினார் மற்றும் 36 ரன்கள் மற்றும் 3 கேட்ச்களை எடுத்தார். முகமது ஷமி உலகக் கோப்பையில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி விளையாடிய ஏழு போட்டிகளில் மூன்று ஐந்து விக்கெட்டுகளையும், நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இந்த வேகப்பந்து வீச்சாளர் ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
18 உலகக்கோப்பை போட்டிகளில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 7 பந்து வீச்சாளர்கள் மட்டுமே 50 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர்.