ஜல்லிக்கட்டு போட்டியில் சாதிப் பெயர் கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகளை அவிழ்க்கும் போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு சாதியை குறிப்பிடக் கூடாது என்று அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல மாவட்டங்களில் நடந்து வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 15ம் தேதி, பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17ம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மதுரை மாநகரை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் ஜல்லிக்கட்டு போட்டிகளை சாதி, மத ரீதியாக நடத்தகூடாது, என்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஜாதி பெயரை தவிர்க்கவேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகளை அவிழ்க்கும் போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு சாதி பெயர் குறிப்பிடப்பட்டு காளைகள் அவிழ்த்து விட படுகிறது.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான தேதிகள் அறிவிப்பு – மதுரை மாவட்ட ஆட்சியர்!
இப்படியெல்லாம் செய்யக்கூடாது என கடந்த 2019-ஆம் ஆண்டிலே உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் முறையாக பலரும் பின்பற்றவில்லை. எனவே, இந்த ஆண்டு இதனை சரியாக பின்பற்றவேண்டும் என்று மதுரை உயர்நிதிமன்ற கிளையில் மனுகொடுத்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் இருந்து வழக்கறிஞர் உத்தரவுகளை முறையாக பின்பற்றுவோம் என்றும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு சாதி பெயர் சொல்லி அவிழ்க்க கூடாது என்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.