ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான தேதிகள் அறிவிப்பு – மதுரை மாவட்ட ஆட்சியர்!

jallikattu

ஆண்டுதோறும் தை 1ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம்.

அதன்படி, தை 1ஆம் தேதி, ஜனவரி 15 அன்று அவனியாபுரத்திலும், தை 2ஆம் தேதி ஜனவரி 16 அன்று பாலமேடு பகுதியிலும், ஜனவரி 17ஆம் தேதி கை 3ஆம் தேதியில் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 15ம் தேதி, பாலமேட்டில் 16ம் தேதியும் அலங்காநல்லூரில் 17ம் தேதி அன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது என்று அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எந்த இடத்தில் நடைபெறும்.? வெளியான முக்கிய அறிவிப்பு.!

இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டியில் சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என ஐகோர்ட் மதுரைக்கிளை பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் சாதி பெயரில் காளைகளை அவிழ்த்து விடுகின்றனர்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும் முன், தீண்டாமை உறுதிமொழி ஏற்பது குறித்து அரசு பரிசீலனை செய்யவும், சாதி பெயரை குறிப்பிடாமல், காளையின் உரிமையாளர் பெயரை குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்