கேப்டன் மில்லர் நிகழ்ச்சியில் பாலியல் தொல்லை? தொகுப்பாளினி ஐஸ்வர்யா வேதனை!

தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், அருண் மாதேஷ் வரன் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்துகொண்டார்கள்.
இந்த நிலையில், நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரும் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல தொகுப்பாளினி ஐஸ்வர்யாவிடம் ஒருவர் தவறாக நடந்துகொண்டுள்ளார். இதனால் கடுப்பான ஐஸ்வர்யா தன்னிடம் தவறாக நடந்து கொண்ட அந்த நபரை தாக்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வடசென்னை 2 நிச்சியம் வரும்! நடிகர் தனுஷ் பேச்சு!
இது குறித்து தொகுப்பாளினி ஐஸ்வர்யா ” அந்த கூட்டத்தில், ஒரு பையன் என்னை தொந்தரவு செய்தான். நான் உடனடியாக அவரை எதிர்கொண்டு எதுக்காக இப்படி செய்தீர்கள் என்று பேசினேன். பிறகு அவர் ஓடினார். நான் அவரை விடாமல் பின் தொடர்ந்து தாக்கினேன். ஒரு பெண்ணின் உடலை தொடுவதற்கு துணிவு அவருக்கு இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என கூறியுள்ளார்.
இதைப்போலவே, மன்சூர் அலிகான் நடித்த சரக்கு படத்தின் ப்ரோமோஷனின் போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த கூல் சுரேஷ் தொகுப்பாளினி ஐஸ்வர்யா கழுத்தில் மாலை போட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Dear #Captainmiller team,
Before organizing event in big stages.. please ensure fan passes..
If you have less fans, don’t conduct AL in big stages.Giving free passes will lead to this kind of shit things…
Good that girl shouted out ???? pic.twitter.com/FrGgjVdgQK
— X-Tweep (@relatablebru_) January 3, 2024