அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது!
இஸ்லாமியர்கள் பெயரில் போலியாக இமெயில் கணக்கு தொடங்கி, அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் விரைவில் திறக்கப்பட உள்ள ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் 2 பேரை உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர்.
அயோத்தி ராமர் கோவிலில் வெடிகுண்டு வீசப்படும் என உபி டிஜிபி தலைமையகத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 27 அன்று எக்ஸ் தளத்தில் மிரட்டல் இமெயிலில் வந்ததை அடுத்து இந்த கைது நடந்துள்ளது. தற்பொழுது இவர்களின் பின்னணி குறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமர் கோயில் வெடிவைத்து தகர்க்கப்படும், முதல்வர் யோகி ஆதித்யநாத் கொல்லப்படுவார் என இஸ்லாமியர்கள் பெயரில் இமெயில் அனுப்பி மிரட்டிய ஓம்பிரகாஷ் மிஸ்ரா மற்றும் தஹார் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
4வது சம்மனுக்கு திட்டம்! பரபரப்பான சூழலுக்கு மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி!
அவர்களிடம் விசாரணை செய்ததில், ‘alamansarikhan608@gmail.com’ மற்றும் ‘zubairkhanisi199@gmail.com’ ஆகிய இமெயில் ஐடிகள் மூலம் மிரட்டல் பதிவுகளை அனுப்ப பயன்படுத்தப்பட்டதும் பின்னர், இந்த மின்னஞ்சல்கள் பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐயின் அதிகாரி என்று கூறிக்கொள்ளும் ஜுபைர் கான் என்ற நபரால் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.