பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் போலீசில் ஆஜர்..!

பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த ஜெகநாதன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் காவல்துறையில் புகார் ஒன்றை  கொடுத்தார். அதில்” போலி ஆவணங்கள் தயாரித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ‘பூட்டா்’ அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை தொடங்கி உள்ளனர் என தெரிவித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் காவல்துறை கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி கைது செய்தது. போலீசாரின் விசாரணையை அடுத்து துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மாஜிஸ்ரேட் தினேஷ்குமார், ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.

இனி அனைத்து சேவைகளும் ஒரே ஆப்பில்.. விரைவில் ‘SUPER APP’ ..!

இதைத்தொடர்ந்து, உரிய அனுமதி இல்லாமல் நிறுவனம் தொடங்கிய வழக்கில் கைதான துணைவேந்தர் ஜெயராமனின் தனிச் செயலாளர் உட்பட 5 பேர் ஆஜராக சேலம் கருப்பூர் போலீசார் சம்மன் அனுப்பினர். இந்நிலையில், ஆஜராக சமன் அனுப்பியதை தொடர்ந்து கருப்பூர் காவல் நிலையத்தில் 4 பேராசிரியர் உட்பட ஐந்து பேர் ஆஜராகினர். அதன்படி, சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜெயராமன், சுப்பிரமணிய பாரதி, நரேஷ் குமார் ஜெயக்குமார் மற்றும் தினக்கூலி பணியாளர் நந்தீஸ்வரன் உள்ளிட்டோர் போலீசில் ஆஜர் ஆகியுள்ளனர்.  

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்