ஆந்திர முதல்வரின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா காங்கிரஸில் இணைந்தார்!

YS Sharmila

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனரான ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அதுமட்டுமில்லாமல், இந்த இணைப்புக்கு பிறகு ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்.எஸ். ஷர்மிளா, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தொண்டர்களுடன் காங்கிரஸில் இணைந்துள்ளார் ஒய்.எஸ். ஷர்மிளா. ஷர்மிளாவுக்கு சால்வை அணிவித்து, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வரவேற்றனர்.

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்… இந்தியா கூட்டணி இன்று முக்கிய ஆலோசனை!

தெலுங்கானாவில் வாக்குகள் பிளவுபடுவதை தடுக்க காங்கிரஸுடன் இணைவதாக ஷர்மிளா கூறியிருந்தார். நடந்து முடிந்த தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்திருந்தார். தற்போது, தன்னையும், ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியையும் காங்கிரசுடன் இணைத்தார் ஒய்எஸ் சர்மிளா.

காங்கிரஸில் இணைந்தபின் பேசிய ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸ் கட்சி இன்னும் நமது நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சியாகும். காங்கிரஸ் கட்சி எப்போதும் இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நிலைநிறுத்தி, நமது தேசத்தின் அடித்தளத்தை கட்டியெழுப்புகிறது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்