முதல் நாள் முடிவில் இந்திய அணி முன்னிலை..!
தென்னாப்பிரிக்கா இந்தியா அணிகளுக்கு இடையே இன்று முதல் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 23.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியில் முகமது சிராஜ் 6 விக்கெட்களையும், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்களையும் பறித்தனர். அடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 34.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 153 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 39 ரன்கள், சுப்மன் கில் 36 ரன்கள், விராட் கோலி 46 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணியில் நந்த்ரே பெர்கர், லுங்கி நிகிடி , ரபாடா தலா 3 விக்கெட்டை பறித்தனர்.
அடுத்தடுத்து டக் அவுட்…153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா ..!
இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதற்கிடையில், தென்னாபிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடங்க வீரர்களாக டீன் எல்கர் , ஐடன் மார்க்ராம் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் கோலியிடம் கேட்ச் கொடுத்து 12 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் , டேனி டி ஜோர்ஜி தலா 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினர். இதைத்தொடர்ந்து டேவிட் பெடிங்கம் களமிறங்கினார். ஒரு புறம் விக்கெட்டை பறிகொடுத்தலும் மறுபுறம் தொடக்க வீரர் ஐடன் மார்க்ராம் சற்று நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
இந்நிலையில், முதல் நாள் முடிவில் தென்னாபிரிக்க அணி 17 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை பறிகொடுத்து 62 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஐடன் மார்க்ராம் 36*, டேவிட் பெடிங்கம் 7* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதனால் இந்திய அணி தற்போது 36 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியில் முகேஷ் குமார் 2 விக்கெட்களையும், பும்ரா 1 விக்கெட்டை பறித்தனர்.