புத்தாண்டை சிறப்பாக கொண்டாடிய அஜித்! வெளிநாட்டு பெண்ணுடன் நடனம் ஆடிய வீடியோ..

Ajith - New year party

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். படத்தில் அர்ஜுன், ரெஜினா, சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். தற்பொழுது, துபாய்க்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ள நடிகர் அஜித் அங்கு கப்பலில் பயணித்துள்ளார்.

அஜித் படத்தில் கிடைத்த வாய்ப்பு! அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்கும் ரெஜினா?

அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில், ‘தல தல’ என்று அழைக்க… இதனை கேட்ட அஜித், ரசிகர்களை பார்த்து கையசைக்கும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

மேலும், கப்பலில் இருந்து இறங்கிய போது, சூழ்ந்த ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற அவர்களுடன் அஜித் எடுத்த செல்பி புகைப்படமும் இணையத்தில் வைரலாகிறது. அது மட்டும் இல்லாமல், இந்த புத்தாண்டை துபாயில் கொண்டாடிய நிலையில், அங்கு இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். மேலும், அந்த பார்ட்டியில் ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு பக்கம் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு, வெளிநாட்டில் இருந்ததால் நடிகர் அஜித்தால் வர இயலவில்லை. இந்த நிலையில், அஜித்தின் நடன வீடியோவை வைத்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்