Live : திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் காலமானார்! அரசியல் தலைவர்கள் இரங்கல்!

திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் இன்று சென்னையில் காலமானார். போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அரசியல் தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.