பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 வழங்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

O Panneerselvam - pongal parisu

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீட்டு இருக்கிறது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3000 வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுமக்களுக்கு 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் சேர்த்து ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு இருந்தது.

தற்போது, பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. ரொக்கம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலைல, இதை சுட்டிக்காட்டிய ஓ.பன்னீர்செல்வம், பெருவெள்ளத்தினால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, எந்தவித நிபந்தனைகளும் இன்றி ரூ.3000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் தொகுப்பாக சென்ற ஆண்டு 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்ட நிலையில், வரலாறு காணாத அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்ட இந்தச் சூழ்நிலையில், இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு.!

தற்போதைய நிலையில், பொங்கல் தொகுப்பாக, எவ்வித நிபந்தனைகளுமின்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கத்துடன்கூடிய பொங்கல் தொகுப்பினை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்