ஜப்பானில் பயணிகள் விமானம் தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு.!
ஜப்பான் நாட்டில் விமானம் தரையிறங்கியபோது தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம், ஹனடே ஏர்போர்ட்டில் இறங்கியபோது பயங்கரமாக தீப்பிடித்தது.
பயணிகள் விமானமான ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் (JAL 516) தரையிரங்கும்போது, ஹனடே விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
இதில், முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமான விமானத்தில் பயணித்த 379 பயணிகளும், நல்வாய்ப்பாக சரியான நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், கடலோர பாதுகாப்பு விமானத்தில் இருந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பானில் அடுத்த துயரம்!! விமான நிலையத்தில் தரையிறங்கும் போது தீ விபத்து…
கடலோர பாதுகாப்பு விமானத்தில் மொத்தம் 6 பேர் இருந்ததாகவும், அதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் காயங்களுடன் தப்பியதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, நேற்று நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பரிதவித்து வரும் ஜப்பான் நாட்டில், இன்று விமானம் ஒன்று பயணிகளுடன் தீப்பிடித்து எரிந்தது சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.