விஷால் வழக்கு – லைகா பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.!

vishal

லைகா நிறுவனத்தின் ரூ.5.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கக் கோரி நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில், வரும் 19ம் தேதிக்குள் பதிலளிக்க லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சண்டக்கோழி-2 படத்திற்கான ஜிஎஸ்டி தொகையை வழங்காத லைகா நிறுவனத்தின் 5 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துகளை முடக்க வேண்டுமென நடிகர் விஷால்
வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அதாவது, சண்டக்கோழி-2 திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலை வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த 2018ம் ஆண்டு, 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடப்பட்டது.

ஆனால், அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராரத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயை விஷால் பிலிம் பேக்டரி ஜிஎஸ்டி தொகையை செலுத்தியதால் தான் செலுத்தி உள்ளதாக விஷால் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய லைகா நிறுவனம், பல இடங்களில் கடன் பெற்று 500 கோடி ரூபாய் செலவில் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தை தயாரித்து வருவதாகவும், இந்த படம் சரியாக ஓடவில்லை என்றால், கடுமையான நிதி நெருக்கடியை லைகா நிறுவனம் சந்திக்க நேரிடும், தனக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்காமல் போய்விடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வழக்கு தொடர்பாக லைகா நிறுவனம் ஜன.19க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்