பான் இந்திய திரைப்படம் இல்லாமல் வசூலில் மாஸ் காட்டும் பாலிவுட் பாட்ஷா!

Dunki

ஷாருக்கானிடம் இருந்து ஜவான் மற்றும் பதான் வெற்றிக்குப் பிறகு அவரது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘டன்கி’ திரைப்படத்தை ரசிகர்கள் அவளுடன் காத்திருந்தனர். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி  என்பவருடைய இயக்கியுள்ள இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்திருக்கிறார். ராஜ்குமார் ஹிரானி, விக்கி கௌஷல், போமன் இரானி, சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

பாக்ஸ் ஆபிஸில் பிரபாஸின் சலாருடன் ஷாருக்கானின் டன்கி மோதியது. டன்கி ஹிந்தி மொழியில் மட்டுமே வெளியானது, ஆனால் சலார் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது, இது பான் இந்திய திரைப்படமாகும்.

ஆனால், ஹிந்தி திரைப்பட சாயலில் எடுக்கப்பட்டுள்ள டன்கி திரைப்படம் ஹிந்தி மொழில் மட்டுமே வெளியானது. முன்னதாக, ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

டன்கி பான் இந்தியன் படமாக இல்லை என்றாலும், இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடி கிளப்பில் நுளைந்தது. இப்பொது, உலக அளவில் 12 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் மொத்தம் 400 கோடியை கடந்துள்ளது.

7 நாளில் ரூ.300 கோடியை கடந்த டன்கி திரைப்படம்.! பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ஷாருக்கான்…

டன்கி பாக்ஸ் ஆபிஸ் 

முதல் நாள் – 58 கோடி
இரண்டாம் நாள் – 45.40 கோடி
மூன்றாம் நாள் – 53.82 கோடி
நான்காம் நாள் – 53.91 கோடி
ஐந்தாம் நாள் – 45.27 கோடி
ஆறாவது நாள் – 26.73 கோடி
ஏழாவது நாள் – 21.87cr
எட்டாம் நாள் -18.77 கோடி
ஒன்பதாம் நாள் – 16.33 கோடி
பத்தாம் நாள் – 21.20 கோடி
பதினோராம் நாள் -19.30 கோடி
பன்னிரண்டாம் நாள் – 19.80 கோடி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்