தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை!
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, திருச்சி – புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இந்த பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, 1,528 மாணவர்களுக்கு வழங்குவதன் அடையாளமாக 30 மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பட்டங்களை வழங்கிய பிறகு பிரதமர் மோடி, பல்வேறு தலைப்புகளில் முனைவர் பட்டம் பெற்றவர்களையும் கெளரவித்தார். இதன்பின், எனது மாணவ குடும்பமே என்றும் வணக்கம் எனவும் தமிழில் சில சொற்களை கூறி பிரதமர் மோடி உரையாற்றினார். புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதிதாசனின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டியும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!
அவர் கூறியதாவது, மிக அழகிய மாநிலமான தமிழ்நாட்டில் இருப்பது மகிழ்ச்சி இருப்பது. 2024 புத்தாண்டில் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இந்த பட்டமளிப்பு விழா இதுவாகும். அதுவும், பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் முதல் பிரதமர் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இது எனக்கு சிறப்பான ஒன்று. வழுவான கட்டமைப்பின் காரணமாக மொழி, அறிவியல் போன்ற அனைத்து துறைகளிலும் இந்த பல்கலைக்கழகம் சிறந்து விளங்குகிறது.
பண்டைய காலத்தில் காஞ்சி, மதுரை நகரங்கள் கல்வியில் சிறந்து விளங்கின. உலகமே இந்தியாவை உற்றுப் பார்க்கிறது. இந்தியாவை உலக நாடுகள் நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது. வரலாற்றில் பல மாற்றங்கள், சாதனைகளுக்கு காரணமாக இருந்தவர்கள் மாணவர்கள். சங்க காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட முறைதான் தற்போதும் கல்வித்துறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சாதனை படைத்தது வருகிறது. கற்ற கல்வியும், அறிவியலும் வேளாண்மையை மேம்படுத்த, விவசாயிகளுக்கு கை கொடுக்க வேண்டும். மாணவர்கள் கல்வி கற்பதோடு நிற்காமல் சகோரத்துவம், நல்லிணக்கத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பல்கலைக்கழகங்கள் சிறந்து விளங்கினால் நமது நாடும் சிறந்து விளங்கும் எனவும் தெரிவித்தார்.