கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தல அறிக்கை வெளியீட்டு இருக்கலாம்! நடிகர் ரஞ்சித் கருத்து!

vijayakanth vadivelu

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் சென்று இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆனால், சினிமாவில் பல படங்களில் கேப்டன் விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்த வடிவேலு கேப்டன் மறைவுக்கு இரங்கல் அஞ்சலி செலுத்த நேரில் வரவில்லை சமூக வலைத்தளங்களில் கூட அவர் இரங்கலை தெரிவிக்கவில்லை. வடிவேலு அஞ்சலி செலுத்தாது ஏன் என பலரும் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பிக்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், பிரபல நடிகரான ரஞ்சித் “வடிவேலு விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வராதது ஏன் என கேள்விக்கு பதில் அளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித் இது பற்றி பேசுகையில் ‘வடிவேலு வராததைப் பற்றி நான் அப்புறம் சொல்கிறேன் முதலில் கேப்டன் விஜயகாந்த் மிகவும் நல்ல மனிதர் ஒரு நடிகர் மறைந்து விட்டால் இவ்வளவு கூட்டம் வரும் என்று சிலரும் நினைக்கலாம். ஆனால் அவர் நடிகராக மட்டுமின்றி ஒரு நல்ல மனிதராகவும் பலருடைய மனதில் இடம் பிடித்துள்ளார் .

பட்டினி போடுவது தவறு! பசியை போக்க ரயிலை நிறுத்திய கேப்டன் விஜயகாந்த்!

அதன் காரணமாக தான் அவருடைய இறப்புக்கு இவ்வளவு கூட்டம் வந்திருக்கிறது. அவருடைய மறைவு எனக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. வடிவேலு அவருடைய மறைவிற்கு வராததற்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. அது அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை அதை பற்றி நான் பேச வில்லை ஏனென்றால், அதனை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் வரவில்லை என்றாலும் கூட சமூக வலைத்தளங்களின் மூலம் ஒரு அறிக்கையை ஒன்றாவது வெளியிட்டு இருக்கலாம்.

அறிக்கையின் மூலம் அவர் தனது இரங்கலை தெரிவித்து இருக்கலாம். கட்டாயமாக வாழ்க்கையில் யாரும் யாருக்கும் எதிரி கிடையாது. கட்டாயமாக அவர் அஞ்சலி செலுத்த நேரில் வரவில்லை என்றாலும் கூட அறிக்கை வெளியீட்டு இருக்கலாம் என்பது தான் என்னுடைய கருத்து” எனவும் நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்