டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வேவுடன் மோத போகும் மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு.
ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே செல்லும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, அக்டோபர் 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஜிம்பாப்வே ‘ஏ’ அணியுடன் மோதுகிறது.
பின்னர், ஜிம்பாப்வே அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 21 முதல் 25-ஆம் தேதி வரையிலும், 2-வது டெஸ்ட் 29 முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
இதில், பங்கேற்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கேப்டன் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான அணிக்கு, கிரெய்க் பிரத்வெயிட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் விவரம்:
தேவேந்திர பிஷு, ஜெர்மெய்ன் பிளாக்வுட், ரோஸ்டன் சேஸ், மிகெல் கம்மின்ஸ், ஷேன் டெளரிச், ஷானன் கேப்ரியல், ஷிம்ரன் ஹெட்மைர், கைல் ஹோப், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், கிரன் பாவெல், ரேமன் ரீஃபர், கெமர் ரோச் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.