யார் பெஸ்ட்..? ஆஸ்திரேலிய வீரர்களின் மனநிலை குறித்து தெ.ஆ முன்னாள் ஜாம்பவான் பரபரப்பு தகவல்..!

கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதில்  1989 இல் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2013 இல் ஓய்வு பெற்றார். சச்சின் டெண்டுல்கர் தனது 24 ஆண்டுகால சர்வதேச வாழ்க்கையில் பல சாதனைகளை தனது பெயரில் வைத்திருந்தார். அதேபோல மேற்கிந்திய தீவுகளின் சிறந்த பேட்ஸ்மேன் பிரையன் லாராவும் சச்சினை போல பல சாதனைகளை செய்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு வருடம் கழித்து கிரிக்கெட்டில் பிரையன் லாரா அறிமுகமானார்.  ஆனால் அவர் 2007 இல் ஓய்வு பெற்றார். சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் மற்றும் ஆளுமை குறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் அலி பேக்கர் பாராட்டினார். பிரையன் லாராவை விட சச்சின் டெண்டுல்கரை சிறந்த வீரர் என்று அலி பச்சர் கூறினார்.

முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் அலி பச்சர் மேலும் கூறுகையில், “பிரையன் லாராவை விட சச்சின் டெண்டுல்கர் சிறந்த வீரர், ஆனால் ஆஸ்திரேலியர்கள் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் விட வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தான் சிறந்தவர் என்று நம்புகிறார்கள். ஆனால் இது முற்றிலும் முட்டாள்தனம். லாரா மற்றும் டெண்டுல்கர் இடையே எந்த ஒப்பீடும் செய்ய விரும்பவில்லை என்று கூறினார்.

பிரையன் லாரா நான்கு மில்லியன் பார்வையாளர்களுக்கு முன்னால் விளையாடினார். ஆனால் இவர் 1.4 பில்லியன் மக்கள் முன்னிலையில் விளையாடினார். இதனால் சச்சின் எவ்வளவு அழுத்தத்தை எதிர்கொண்டிருப்பார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? சச்சின் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர் , நாங்கள் இன்னும் தொடர்பில் இருக்கிறோம். அவர் அசாதாரணமானவர், அவர் வேறொரு உலகத்திலிருந்து வந்தவர் போல. அவருடைய பல சிறந்த இன்னிங்ஸ்களை நான் பார்த்திருக்கிறேன் என தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர். சச்சின் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1741 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்