ராமர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல..! ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பேட்டி.!

J&K Ex CM Farooq Abdullah says about God Ram

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுளள ராமர் கோயில் திறப்பு விழா, கும்பாபிஷேக விழா (Pran  Pratishtha) வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜனவரி 16ஆம் தேதி விழா ஆரம்பித்து, ஜனவரி 22ஆம் தேதி  மதியம் 12.45மணிக்குள் முக்கிய நிகழ்வான கருவறையில்  ராமர் சிலை நிறுவப்படும் நிகழ்வு நடைபெற உள்ளது.

ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் , உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள், ஆன்மீக குருக்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் பிரதமர் மோடி.! ரூ.15,700 கோடிக்கு திட்டங்கள்.. புத்தம புது ஏர்போர்ட்.. ரயில் நிலையம்…

ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்தும் கடவுள் ராமர் பற்றியும்  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசுகையில், கடவுள் ராமர் இந்து மதத்திற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர் என கூறினார்.  மேலும், இந்தியாவில் சகோதரத்துவம் குறைந்து வருவதாகவும், அதை புதுப்பிக்க வேண்டும் என்றும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு முயற்சி செய்த மக்களுககு வாழ்த்தக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஃபரூக் அப்துல்லா மேலும் கூறுகையில், ராமர் உலகில் உள்ள அனைவருக்கும் சொந்தமானவர் என ஆன்மீக புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது என்பதை நான் முழு தேசத்திற்கும் கூற விரும்புகிறேன். சகோதரத்துவம், அன்பு, ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் உதவி செய்தல் போன்ற பண்புகளை பகவான் ராமர் பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வாழ்வில் வீழ்ச்சியடைந்தவர்களை எந்தவித மத, இன வேறுபாடின்றி உயர்த்த வேண்டும் என்று எப்போதும் கூறியவர் ராமர். உலகளாவிய பொதுவான போதனைகளை வழங்கியுள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும்  நிலையில், நம் நாட்டில் குறைந்து வரும் சகோதரத்துவத்தை மீட்டெடுக்க நாட்டு மக்களுக்கு இந்த கருத்துக்களை நான் கூற விரும்புகிறேன். பகவான் ராமர் கூறிய சகோதரத்துவத்தை அனைவரும் ஏற்க வேண்டும் என கூற விரும்புகிறேன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்