விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி -பிரேமலதா விஜயகாந்த்..!
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலை காலமானார். விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தீவுத்திடலில் நேற்று வைக்கப்பட்டிருந்தது.
அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் நேற்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார். அதில், “இறுதி ஊர்வலத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி, இன்று முதல் பொதுமக்கள் அனைவரும் கட்டுப்பாடு ஏதும் இல்லாமல் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தலாம்.
விஜயகாந்த் உடலை வட்டமடித்த கருடன்! கையெடுத்து கும்பிட்ட மகன்கள் – வைரலாகும் வீடியோ!
கேப்டன் விட்டு சென்ற பணிகள் ஏராளமாக உள்ளன. அதனை தொடர்ந்து நாம் செயல்படுத்த வேண்டும். பொது இடத்தில் கேப்டன் விஜயகாந்த்திற்கு மணிமண்டபம் அமைக்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என தெரிவித்தார்.