விஜயகாந்த் உடலை வட்டமடித்த கருடன்! கையெடுத்து கும்பிட்ட மகன்கள் – வைரலாகும் வீடியோ!
உடல்நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் , சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். கேப்டனின் மறைவு அவரை சார்ந்தவர்களை தாண்டி லட்சக்கணக்கான பொதுமக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அவரின் உடலை காண, பல்லாயிரகணக்கானோர், கேப்டனின் உடல் வைக்கப்பட்டு இருந்த தேமுதிக அலுவலகத்திற்கும், சென்னை தீவுத்திடலுக்கும் வந்திருந்தனர்.
அதன்பிற்கு நேற்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது தேமுதிக அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இடத்திற்கிடையில், நேற்று மாலை சென்னை தீவுத்திடலில் இருந்து தேமுதிக அலுவலகத்திற்கு இறுதி ஊர்வலம் வரும் வழியில், சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே, கேப்டன் உடலை சுற்றி வெள்ளை நிற கருடன் வட்டமிட்ட நிலையில், பிரேமலதா உட்பட மொத்த கூட்டமும் கைகூப்பி வணங்கினர்.
நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்கிற விஜயகாந்தை மார்கழி மாதம் கருடன் வந்து அழைத்து சென்றார்…????#கேப்டன் உடலை சுற்றி வட்டமிட்ட கருடன் ????
பிரேமலதா உட்பட மொத்த கூட்டமும் கைகூப்பி வணங்கினர் ???? #விஜயகாந்த் pic.twitter.com/Y3k2yT1WmW
— Santhosh Krishnan (@sashkrish18) December 30, 2023
தற்போது, இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விஜயகாந்த் உடலுக்கு மேல் வானில் 3 முறை வட்டமிட்ட சம்பவம் அங்கு குவிந்திருந்த மக்களை மெய்சிலிர்க்க வைத்தது. இப்பொது, அந்த வீடியோக்களை பகிர்ந்து கொண்டு, இந்த மாமனிதனை பார்க்க கடவுளே வந்துவிட்டார் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்கிற
????விஜயகாந்தை???? மார்கழி மாதம் கருடன் வந்து அழைத்து சென்றார்…???? pic.twitter.com/lpmqNKcU6u— KCS prabhu (@kcs_prabhu) December 30, 2023