சோறு போட்டு அழகு பார்த்த தாய்! கதறி அழுத எம்.எஸ்.பாஸ்கர்!
கேப்டன் விஜயகாந்தின் மறைவு தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சென்னை தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த நிலையில், பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
குறிப்பாக ரஜினிகாந்த், ராதா ரவி, பார்த்திபன், லிவிங்ஸ்டன், எம்எஸ்பாஸ்கர், மன்சூர் அலிகான், வாகை சந்திரசேகர், பாக்கியராஜ் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அவர்களை போல எம்.எஸ்.பாஸ்கர் கண்ணீருடன் கதறியபடி தனது அஞ்சலியை செலுத்தினார்.
அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ” என்னால் சத்தியமாக விஜயகாந்த் இறப்பு தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எனக்கு சாப்பாடு போட்டு அழகு பார்த்த தாய். அவர் எனக்கு அம்மா அப்பா எல்லாமே. சாப்பாடு மட்டுமில்ல பல வகையில் அவர் எனக்கு உதவிகளை செய்து இருக்கிறார். நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே அவரை எனக்கு தெரியும்.
எல்லா பேட்டிகளிலும் நான் சொன்னது போல என்னுடைய அண்ணன் விஜயகாந்த் எனக்கு அம்மா தான். அப்பா தான். அண்ணனை பார்க்கணும்னு நிறைய தடவ ஆசைப்பட்டேன் ஆனா, இப்படி பார்ப்பேன்னு நெனச்சு கூட பார்க்கல. அவருடைய மிகவும் வேதனையை கொடுத்துள்ளது” என கண்ணீருடன் பேசியுள்ளார்.
மேலும், சென்னை தீவுத்திடலில் இருந்து மதியம் 2.15 மணியளவில் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அவருடைய உடல் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.