ஆப்கானிஸ்தானுக்கு புதிய கேப்டனை நியமித்த கிரிக்கெட் வாரியம்..!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. 2-வது போட்டி 31 தேதியும், கடைசி போட்டி ஜனவரி 2ம் தேதியும் நடைபெறுகிறது. இதற்காக 18 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. அதில் மூத்த பந்துவீச்சாளர் ரஷித் கான் காயத்தில் இருந்து மீண்டு வருவதால், அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.
அவர் இல்லாத நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் சத்ரான் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர ஃபசல்ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர் என்பதுதான் ஆச்சரியமான விஷயம். சமீபத்தில், ஆப்கானிஸ்தான் வாரியம் இந்த 2 வீரர்கள் வெளிநாட்டு லீக்களில் விளையாட தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முகமது நபி, நூர் அகமது, ஃபரித் அகமது, ரஹ்மானுல்லா குர்பாஸ் என பல மூத்த வீரர்கள் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் டி20 அணி:
இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), ரஹ்மத்துல்லா குர்பாஸ், முகமது இஷாக், ஹஸ்ரத்துல்லா ஜசாய், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, தர்வேஷ் ரசூலி, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, கரீம் ஜனத், அஸ்மத்துல்லா, அஷ்ரஃப் உமர்சாய், அஷ்ரஃபுல்லாஹ் உமர்ஸாய். , நவீன் உல் ஹக், நூர் அகமது, முகமது சலீம் மற்றும் கைஸ் அகமது.