மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் ‘கேப்டன் விஜயகாந்த்’ இறுதி ஊர்வலம்!

RIPVijayakanth

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்தின் உடல் மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  மறைந்த விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத் திடலில் இன்று காலை வைக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை தீவுத் திடலில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்த இறுதி ஊர்வலத்தில், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீருடன் பங்கேற்றுள்ளனர். மக்கள் வெள்ளத்தில் அலங்கார ஊர்தி தேமுதிக அலுவலகம் நோக்கி மெதுவாக ஊர்ந்து செல்கிறது.

இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ள பொதுமக்கள் “கேப்டன்”, “கேப்டன்” என முழக்கம் எழுப்பி வருகின்றனர். மேலும், இறுதி ஊர்வலத்தில் விஜயகாந்த் மகன்கள் இருவரும் மக்களை பார்த்து கொண்டு கை குப்பி கதறி அழுத வண்ணம் செல்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு பிரியாவிடை கொடுத்து வருகின்றனர்.

விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தொடங்கியது..!

இந்த இறுதி ஊர்வலம் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்றடைந்த பின், மாலை 4 .45 மணிக்கு அளவில் இறுதி சடங்கு நடைபெறுகிறது. விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படும் சந்தன பேழையில்  “புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதேபோல விஜயகாந்த் பிறப்பு , இறப்பு தேதிகளும் இடம் பெற்றுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்