நேரில் வர முடியவில்லை! தொலைபேசியில் கேப்டன் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்த அஜித்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அவருடைய உடல் சென்னை, அண்ணாசாலையில் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த நிலையில், பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
குறிப்பாக ராதா ரவி, பார்த்திபன், லிவிங்ஸ்டன், எம்எஸ்பாஸ்கர், மன்சூர் அலிகான், வாகை சந்திரசேகர், பாக்கியராஜ், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் அஞ்சலியை செலுத்தினார்கள். நேற்று விஜய், இளையராஜா, பல பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர்.
கடைசி நிமிடத்தில் கேப்டன் சொன்னது இதுதான் -பெசன்ட் ரவி எமோஷனல்!
அவர்களை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் கேப்டன் விஜயகாந்த் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார். படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதால் தன்னால் நேரில் வரமுடியவில்லை எனவும் வருத்தத்துடன் பேசியுள்ளார். இரங்கல் தெரிவித்துவிட்டு விஜயகாந்த் குடும்பத்தினருக்கு அஜித்குமார் ஆறுதல்களையும் தெரிவித்தார்.
மேலும், இன்னும் சற்றுநேரத்தில் தீவு திடலில் இருந்து தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்லும் கேப்டன் விஜயகாந்தின் உடல், மாலை 4 மணிக்கு மேல் அடக்கம் செய்யப்படவுள்ளது. இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.