விஜயகாந்த் இறுதி ஊர்வலம்.! தேமுதிக அலுலகத்தில் போலீசார் லேசான தடியடி.!

DMDK Leader Vijayakanth Furnel

உடல்நலக்குறைவால் உயிரிழந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் தற்போது பொதுமக்கள் பார்வைக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிரமத்தில் உள்ள அவரது வீட்டில் முதலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது.

விஜயகாந்த் இறுதிச் சடங்கில் பொது மக்களுக்கு அனுமதியில்லை – போலீஸ் அறிவிப்பு.!

கேப்டன் விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து  கொண்டிருந்த காரணத்தால், இன்று அதிகாலை சென்னை தீவு திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது. அங்கும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

சென்னை தீவு திடலில் இருந்து ஈவெரா சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் அடக்கம் செய்ய கொண்டு வரப்பட உள்ளது. இறுதி சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்க குடும்பத்தினர் , முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வேண்டும் என தேமுதிக அலுவலகத்திற்குள் செல்ல பல தேமுதிக தொண்டர்கள் முற்பட்டனர். இதனை காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் , அங்கு சற்று பரபரப்பான சூழல் நிலவியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்