#RIPVijayakanth : விஜயகாந்த்தின் இறுதி பயணம்… பிரபலங்கள் மரியாதை… 

RIPVijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி கேப்டன் விஜயகாந்த்தின் உயிர் பிரிந்தது. விஜயகாந்த் மறைவை அறிந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர், தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் என அனைவரது மனதையும் வெகுவாக பாதித்தது.

நேற்று தனியார் மருத்துவமனையில் இருந்து முதலில் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு, சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அவரது உடல் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதன் காரணமாக கட்சி அலுவலகத்தில் இருந்த விஜயகாந்த் உடல் இன்று அதிகாலை சென்னை தீவு திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் திரளான தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  அதே போல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களும் கேப்டன் விஜயகாந்திற்கு தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
US President Donald trump
maruthamalai - murugan vel
tn rain
Kane Williamson
waqfboard - tvk vijay
Trump's tariffs full list