கேப்டன் விஜயகாந்த் மறைவு: அஞ்சலி செலுத்த சென்னை புறப்பட்டார் ரஜினிகாந்த்!

vijayakanth rajinikanth

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 71. இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நேரில் சென்றும் சமூக வலைத்தளங்களின் மூலமும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

விஜயகாந்தின் மறைவுச் செய்தி அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தினார். அதைப்போல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் விக்ரம், கமல்ஹாசன், அருண் விஜய், இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் ரேகா, குஷ்பு, நமீதா உள்ளிட்ட பிரபலங்களும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் இரங்கல்! 

இந்த நிலையில், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சென்றுள்ளார். வேட்டையன் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வருகை தந்திருந்தார். இதனையடுத்து, இன்று விஜயகாந்த் இறப்பு செய்தியை அறிந்த அவர் வேகமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்துவிட்டு சென்னைக்கு சென்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்