இனி ரூ.25க்கு ஒரு கிலோ அரிசி! விரைவில் வரும் பாரத் அரிசி…

rice

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையொட்டி, அதிகரித்து வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை சமாளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக,Bharatdalயை கிலோவுக்கு 25 ரூபாய் தள்ளுபடி விலையில் அறிமுகப்படுத்த மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

சமீபகாலமாக அரிசி விலை கிடுகிடுவென்று உயர்ந்து ரூ.100 வரை சென்றது. இந்நிலையில், விரைவில் பாரத் என்ற பிராண்ட் பெயரில் ரூ.25க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதனால், ஏழை நடுத்தர மக்கள் அரிசியை வாங்க முடியாத சூழல் உருவானதால், விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (Nafed), இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் மொபைல் வேன்கள் போன்ற அரசு நிறுவனங்கள் மூலம்ம் ரூ.25க்கு அரிசியை விற்பனை செய்யவுள்ளது.

2024 தேர்தல் கூட்டணி நிலவரம்.! தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு தேசிய தலைமை அழைப்பு.!

மேலும், கோதுமை மாவு( பாரத் அட்டா ) மற்றும் பருப்பு வகைகள் (பாரத் தால்) ஆகியவற்றுக்கான தள்ளுபடி விலைகள் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான ஏழை மக்கள்பயன் அடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்