சென்னையில் பாய்லர் வெடித்த பயங்கர விபத்தில் ஒருவர் பலி.!

சென்னை தண்டையார்பேட்டை உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (IOC) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாயிலர் வெடித்து ஊழியர் பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இன்று பிற்பகல் 12 மணியளவில் பயங்கர சத்தத்துடன் பாயிலர் வெடித்ததாக கூறப்படுகிறது.
இதனால், அச்சமடைந்த ஊழியர்களும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களும் அலறியடித்து ஓடினர். அப்போது, பாயிலர் அருகே பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்களான பெருமாள் மற்றும் 2 பேர் விபத்தில் சிக்கினர்.
பாயிலர் வெடித்ததை தொடர்ந்து, மற்ற ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது, விபத்தில் சிக்கிய மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில், அதில் கரிமேடு பகுதியை சேர்ந்த பெருமாள் (52) என்பவர் உயிரிழந்துள்ளார்.
எண்ணூர் அமோனியா வாயுக்கசிவு: பாதுகாப்பு தணிக்கை சான்றிதழ் அவசியம் – அன்புமணி ராமதாஸ்!
ஏற்கனவே, நேற்றிரவு எண்ணூர் அருகே உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவைத் தொடர்ந்து, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் வடசென்னை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025