SAvIND: பாக்சிங் டே டெஸ்ட்.. போட்டி தொடங்குவதில் தாமதம்…!
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் களமிறங்கியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே தடுமாற்றமாக அமைந்துள்ளது. ஏனென்றால், இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வந்தனர். அதன்படி, இந்திய அணி 11 ஓவரில் 3 விக்கெட்டை பறிகொடுத்தது. ரோஹித் ஷர்மா 5 , யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்கள் , சுப்மன் கில் 2 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
அடுத்து வந்த விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் சற்று நிதானமாக விளையாடி சரிவில் இருந்த அணியை மீட்டு கொண்டு வந்தனர். இருப்பினும் முதல் நாளில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இதனால் முதல் நாள் முடிவில் இந்திய அணி 59 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 38, ஷ்ரேயாஸ் ஐயர் 31, ஷர்துல் தாக்கூர் 24 ரன்கள் எடுத்தனர்.
UPDATE – Start of play on Day 2 of the 1st Test has been delayed.
We await further updates. #SAvIND
— BCCI (@BCCI) December 27, 2023
தென்னாபிரிக்கா அணியில் ககிசோ ரபாடா 5 விக்கெட்டையும், நந்த்ரே பெர்கர் 2 , மார்கோ ஜான்சன் 1 விக்கெட்டையும் பறித்தனர். இந்நிலையில், இன்று 2-ஆம் நாள் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதால் போட்டி தொடங்க தாமதமானது.