எண்ணூர் அமோனியா வாயுக்கசிவு: பாதுகாப்பு தணிக்கை சான்றிதழ் அவசியம் – அன்புமணி ராமதாஸ்!
எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியார் உர ஆலையில் நேற்று இரவு அமோனியா வாயு வெளியேறியது. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். பதற்றம் அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைக்கு வந்தனர்.
பின்னர் காவல்துறை அறிவுறுத்தலின் பெயரில் பொதுமக்கள் வீடுகளுக்கு சென்றனர். அமோனியா வாயு கசிவுக்கு காரணமான தனியார் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமோனியா கசிவு ஏற்பட்ட எண்ணூர் உர ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், வட சென்னையில் இயங்கும் அனைத்து ஆலைகளுக்கும் பாதுகாப்பு தணிக்கை சான்றிதழ் அவசியம் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது X தள பக்கத்தில், தொடர்ச்சியாக எண்ணூரில் உள்ள ஆலைகளில் இருந்து வாயுக் கசிவு, எண்ணெய் கசிவு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
எண்ணூர் வாயு கசிவு – பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை..!
தனியார் தொழிற்சாலையின் அலட்சியம் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு அதிர்ச்சியளிக்கிறது. எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்ததால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் முழுமையாக களையப்படாத நிலையில் அடுத்து வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கிறது.
எண்ணூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அமோனியா வாயுக்கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.
இதனால், தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அங்கு உள்ள அனைத்து ஆலைகளையும் பரிசோதித்து பாதுகாப்பு தணிக்கை சான்றிதழை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியறுத்தியுள்ளார்.
எண்ணூர் உர ஆலையில் அமோனியா வாயுக்கசிவால் மக்கள் பாதிப்பு:
அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ள வேண்டும்!சென்னை எண்ணூரை அடுத்த பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் என்ற உர நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் அப்பகுதியில் உள்ள…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) December 27, 2023