எல்லாரையும் மொத்தமா மாத்துங்க..!!சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..
சென்னை: சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அனைவரையும் மொத்தமாக பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.இதில் ஷெனாய் நகரில் மாநகராட்சியின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை மாநகராட்சியில் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழையும் பெற முடியாத நிலை உள்ளது என்று ஏற்கனவே கூறியிருந்தார். மேலும், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை தடுக்க சென்னை மாநகராட்சியிடம் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆக்ரமிப்புகளைத் தடுக்க கடும் நடவடிக்கைள் எடுக்க வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகத்தையும் , அதிகாரிகளையும் கடுமையாக விமர்சித்தார். சென்னை மாநகராட்சியில் இருக்கும் ஊழல் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? சென்னை மாநகராட்சியின் ஊழல் கண்காணிப்புக் குழுவின் பணி என்ன? என்றும் மாநகராட்சிக்குள்ளும் மாநகராட்சிப் பகுதிக்கு உள்ளேயும் லஞ்சத்தை ஒழிக்க எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை சரமாரியாக எழுப்பினார்.
இப்படி கடுமையான கேள்விகளுடன் இவ்வழக்கை விசாரித்து வந்தது நீதி மன்றம். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு பிரிவில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் தீர்ப்பில் கூறினார்.
இந்த தீர்ப்பு லஞ்சம் பெற்று ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாமல் இருக்கும் அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது…
DINASUVADU