முகமது ஷமி இல்லாதது பெரிய பின்னடைவு -அலன் டொனால்ட் பேச்சு!
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இருந்து கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் வேக பந்துவீச்சாளர், முகமது ஷமி விலகியுள்ளார். அவர் இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளது இந்திய அணியின் பந்துவீச்சில் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஷமி அணியில் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு என்று தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அலன் டொனால்ட் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கடந்த ஐந்து-ஆறு ஆண்டுகளில் முகமது ஷமி பந்துவீச்சு பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்துள்ளது. அவருடைய பந்துவீச்சில் பல போட்டிகளும் மாறி இருக்கிறது.
INDvsSA: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு!
நான் ஒரு நாள் கிரிக்கெட் போட்ட, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மட்டும் வைத்து சொல்லவில்லை. அவர் டி20 போட்டிகளிலும் அவர் நன்றாக விளையாடி இருக்கிறார். அவருடைய பந்துவீச்சி இந்த முறை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த போட்டியில் இல்லாதது என்னை பொறுத்தவரை மிகப்பெரிய இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு. நான் அவருடைய மிகப்பெரிய ரசிகர். அவர் அணியில் இல்லாதது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
அணியில் முகமது ஷமி இல்லை என்றால் பும்ரா, சிராஜ் போன்ற பெரிய பந்துவீச்சாளர்கள் இருக்கலாம். ஆனால், முகமது ஷமி இல்லாதது என்னை பொறுத்தவரை அணிக்கு பெரிய பின்னடைப்பு. அவருக்கு பிறகு எனக்கு இந்திய அணியில் மிகவும் பிடித்த பந்துவீச்சாளர் என்றால் பும்ரா தான். அவருடைய பந்துவீச்சை பொறுத்தவரையில் முகமது ஷமியை போலவே விக்கெட் எடுக்கும் திறைமையை கொண்டவர். ஷமி இல்லாத இடத்தை அவர் நிரப்புவார்” எனவும் அலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.