மோசடி வழக்கு: நேரில் ஆஜரான லதா ரஜினிகாந்த் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Latha Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான் படத்திற்காக ஆட் பீரோ நிறுவனத்திடம் இருந்து ரூ.6.2 கோடி கடன் பெற்றதில் உத்தரவாத கையெழுத்திட்டு மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரணட் பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், தனக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜரானார். கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினியின் ‘கோச்சடையான்’ தயாரிக்க ஆட் பீரோ நிறுவனத்திடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றதில், உத்தரவாத கையெழுத்திட்டு மோசடி செய்ததாக, லதா ரஜினிகாந்த் மீது சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று மோசடி வழக்கு தொடர்ந்தது.

தூத்துக்குடிக்கு வந்த ரஜினிகாந்த்.! காரணம் என்ன தெரியுமா

பின்னர் இந்த மோசடி வழக்கில், லதா ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இப்பொது, பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரி லதா ரஜினிகாந்த் ஆஜரான நிலையில், அவருக்கு முன்ஜாமின் வழங்கி, வழக்கு விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்