நான் சில விஷயங்களை கூறினால் இபிஎஸ் திகார் சிறை செல்வார் .! ஓபிஎஸ் அதிரடி…
இன்று கோவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கட்சி விவகாரங்கள் குறித்து பல்வேறு விவகாரங்களை கூறினார்.
அவர் பேசுகையில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் என்னை மிகவும் நம்பினர். அவர்கள் நம்பியதால் தான் சாதாரண தொண்டனாக இருந்து, நகர மன்ற தலைவராக மாறி, பின்னர் சட்டமன்ற தலைவராகவும், அமைச்சராகவும் முதல்வராகவும் நான் பொறுப்பில் இருந்தேன். அதிமுக கட்சியின் பொருளாளராக 12 ஆண்டுகள் இருந்துள்ளேன். அதிக ஆண்டுகள் அதிமுக பொருளாளராக நான்தான் இருந்துள்ளேன். என்னிடம் கட்சி நிதி பொறுப்பை ஒப்படைக்கும் போது இரண்டு கோடி ரூபாய் பற்றாக்குறை இருந்தது.
அதிமுக ஜெட் வேகத்தில் செல்லும்… எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. – இபிஎஸ்.!
அந்த சமயத்தில் கடுமையாக நிதி பற்றாக்குறையால் ஜெயலலிதா இருந்தபோது, இரண்டு கோடி ரூபாய் கட்சி பணத்தை என்னிடம் கடனாக கேட்டார்கள். அப்போது நான் கட்சி பணத்தில் இருந்து அவர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் கொடுத்தேன். அதனை ஒரு மாதத்தில் எனக்கு திருப்பி கொடுத்தார்கள் இது எல்லாம் வரலாறு.
தற்போது எங்களை வன்முறை மூலமாக கட்சியை விட்டு வெளியேற்றி, 228 பேரை வைத்து கட்சியை அபகரித்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி நான்கறை வருடங்கள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து ருசி கண்டுவிட்டார். அதனால் மீண்டும் அந்த பதவியில் அமர்ந்து கொள்ளையடிக்க முயற்சிக்கிறார்.
நிரந்தர பொதுச்செயலாளராக அம்மா (ஜெயலலிதா) பொறுப்பில் இருந்தார். அவரை தவிர வேறு யாரும் அந்த பதவிக்கு வர முடியாது என்ற விதியை மாற்றி, கட்சிக்கு துரோகம் செய்தார். மேலும் அவரை முதல்வராக வைத்த சசிகலாவை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தார்கள் இந்த நம்பிக்கை துரோகிகள்.
அம்மா (ஜெயலலிதா) இறந்த பிறகு டிடிவி தினகரன், தன் வசம் இருந்து 36 எம்எல்ஏக்களுடன் தனியே பிரிந்து, ஆளும் அதிமுகவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். அப்போது என்னிடம் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம் வந்து கேட்டுக் கொண்டதன், பெயரில் நான் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தேன். அன்றைய நாள் நான் ஆதரவு கொடுக்காமல் டிடிவி.தினகரன் பக்கம் நின்று இருந்தால், ஆட்சி அப்போதே கைமாறி இருக்கும். நான் சில விஷயங்களை கூறினால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறை வரை செல்லும் அளவுக்கு மாறிவிடும் என்றும், ஓ.பன்னீர்செல்வம் கோவை ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.