அதிமுக பொதுக்குழு : 2024 தேர்தல்… திமுகவுக்கு கண்டனம்.! அனல் பறந்த 23 தீர்மானங்கள்…
இன்று சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு , செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என பல்வேறு முக்கிய அதிமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொன்டுள்ளனர்.
ஆரம்பமே அதகளம்… அதிமுக செயற்குழு கூட்டத்தில் ‘முகப்பு’ டிவிஸ்ட்.!
இந்த பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்க நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக அதிமுக பொதுசெயலாளர் இபிஎஸ்க்கு நன்றி தெரிவித்த தீர்மானம், நாடாளுமன்ற தேர்தல் குறித்த தீர்மானம், திமுக அரசுக்கு கண்டன தீர்மானம் என 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பிட்ட சில முக்கிய தீர்மானங்களை இங்கே காணலாம்…
- அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை குறித்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானம்.
- அதிமுக சார்பில் கடந்த முறை நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.
- நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி தீர்மானம்.
- மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சரியாக செயல்படவில்லை என கண்டன தீர்மானம்.
- விவசாய பயிர்கள் வெள்ளத்தால் மூழ்கி நஷ்டம் ஏற்பட நிலையில், அதற்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என கண்டன தீர்மானம்.
- நீட் விலக்கு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களை ஏமாற்றுகிறார் என தீர்மானம்.
- எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் மரபுகளை மீறி செயல்படுகிறார் என கண்டன தீர்மானம்.
- சட்டம் ஒழுங்கை சரிவர கவனிக்காத திமுக அரசை எதிர்த்து கண்டன தீர்மானம்.
- சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வை கண்டித்து தீர்மானம்.
- வடகிழக்கு கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுக்கவில்லை என கண்டன தீர்மானம்.
- டெங்கு காய்ச்சல் பறவை தடுக்க தவறிய மக்கள் நல்வாழ்வு துறையை கண்டித்து தீர்மானம்
- சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது அதனை நேரலையில் ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்.
- கச்சத்தீவை மீட்க தவறிய திமுக அரசை கண்டி தீர்மானம்.
- திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்.
- ஈழ தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் தீர்மானம்.
- வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் என தீர்மானம்.
- சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டுவர கோரிக்கை வைக்கும் தீர்மானம்.
- நாடாளுமன்ற தேர்தலுக்கு முறையான வாக்காளர் பட்டியலை வெளியிட்டு அதன்படி தேர்தல் நடத்த வேண்டும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்ய தீர்மானம்.
- கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இறந்தது குறித்து இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.