சிதம்பரம் ஆருத்ரா தரிசனம்.! தேரோட்ட திருவிழா கோலாகலம்…
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்றுள்ள நடராஜர் கோயிலில் தமிழ்மாதம் ஆனியில் திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் வெகு கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
கடந்த டிசம்பர் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா தொடங்கியது. 9ஆம் நாளான இன்று பக்தர்கள ஆவலுடன் எதிர்பார்த்த காத்திருந்த தேரோட்டம் நடைபெற்று வருகிறது. முதலில் விநாயகர் தேரோட்டத்துடன் இன்றைய விழா தொடங்கியது. அதன் பிறகு முருகர் தேரோட்டம் தொடங்கியது .
அதன் பிறகு பக்தர்கள் எதிர்நோக்கி காத்திருந்த நடராஜர் தேரோட்டம் தொடங்கியது . பின்னர் , சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் ஆகியோர்களது தேரோட்டமும் தொடங்கியது. சிதம்பரம் கிழக்கு மாடவீதி பகுதியில் இந்த தேரோட்டம் நடைபெறுகிறது. பகதர்கள் பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
தேரோட்டத்தை வரவேற்க பெண் பக்தர்கள் சாலைகளில் வண்ண வண்ண கோலமிட்டுள்ளனர். சிவனின் ஆன்மீக முழக்கத்தை விண்ணப்பிளக்கும் அளவுக்கு கரகோஷம் எழுப்பி வருகின்ற்னர். இதனை தொடர்ந்து நாளை மதியம் மிக முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசன விழாவானது நடைபெற உள்ளது.