நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித்குமார்! அசல் பட ஜோடியின் வைரல் வீடியோ…

Ajith Kumar Bhavana

நடிகர் அஜித் மற்றும் நடிகை பாவனா அஜர்பைஜானில் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டனர். மேலும், இருவரின் சமீபத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாவனா தனது கன்னட படமான ‘பிங்க் நோட்’ படப்பிடிப்பில் அஜர்பைஜானில் நடித்து வருகிறார்,

ஏற்கனவே, அஜித் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் அஜித் தனது வவிடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் ஸ்பாட் அருகே ‘பிங்க் நோட்’ பட ஷூட்டிங் நடைபெற்று நிலையில், பாவனா இருப்பதை அறிந்த அஜித், ஒரு சந்திப்பிற்காக நடிகையை அணுகி தனது படப்பிடிப்பின் இடையே அவரை சந்தித்து உரையாடினார்.

அப்போது, அஜித் சரியான நேரத்தில் நடிகை இருக்கும் இடத்தை அடைய தவறிவிட்டார். அதனால், அஜித் தாமதமாக வந்ததற்காக நடிகையிடம் மன்னிப்பு கேட்க, நடிகை நீங்க லேட்டாக வந்ததால், நானும் லேட்டாக வந்தேன் என்று ஜாலியாக உரையாடினார்கள்.

ஷங்கர் சொன்னதால் தான் மகான் படத்தில் நடிச்சேன்! பாபி சிம்ஹா ஓபன் டாக்!

அஜித் மற்றும் பாவனா ஆகிய இருவரும் அசல் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். நீண்ட நாட்கள் கழித்து ஒருவருக்கொருவர் சந்தித்த நிலையில் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்