அன்னபூரணி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா என்பவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அன்னபூரணி. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுடன் சத்யராஜ், அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜெய், உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்து இருந்தார்கள்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தில் நடிகை நயன்தாரா சமையல் செய்யும் பெண்ணாக நடித்து இருக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாக படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
படத்துக்கு 10 கோடி விளம்பரத்துக்கு 5 கோடி? அதிர வைக்கும் நயன்தாரா சம்பளம்!
படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வெற்றியடைந்துள்ள நிலையில் தற்போது படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அதன்படி படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் எனவும் அறிவித்தும் உள்ளது. அதன்படி அன்னபூரணி திரைப்படம் வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் திரையரங்குகளில் வெளியானபோது சென்று பார்க்காமல் அன்னபூரணி படத்தை மிஸ் செய்தவர்கள் வருகின்ற 29-ஆம் தேதி படத்தை ஓடிடியில் பார்க்கலாம். இந்த படத்தை தொடர்ந்து நயன்தாரா அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025